ஹாங்காங்கில் நாடு கடத்தல் சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

ஹாங்காங்கில் நாடு கடத்தல் சட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு

2 mins read
73044b6a-dd44-43de-9145-3aa7a76202e2
சீனாவின் உத்தேச நாடு கடத்தும் சட்டத்தை எதிர்த்து நேற்று முன்தினம் நடந்த பேரணியில் போலிசாருடன் மோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: இபிஏ -

ஹாங்காங்: சீனாவின் உத்தேச நாடு கடத்தும் சட்டத்தை எதிர்த்து நேற்று முன்தினம் ஹாங்காங்கில் வரலாறு காணாத அளவில் மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதனையடுத்து புதிய ஆர்ப் பாட்டம் நாளை நடத்தப்பட உள்ள தாக ஹாங்காங் ஆர்ப்பாட்டக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

மனித உரிமைகள் முன்னணி எனும் அமைப்பு நாளை உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்குப் பேரணியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நேற்று முந்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தை வழி நடத்திய கூட்டணியின் தலைவர் ஜிம்மி ஷாம் கூறியுள்ளார்.

சந்தேக நபர்களை ஹாங்காங் இலிருந்து சீனாவிற்கு நாடு கடத்த இந்தச் சர்ச்சைக்குரிய சட்டம் வழிவகுக்கும்.

ஹாங்காங் அரசியல் எதிர்ப் பாளர்களை இலக்காகக் கொண்டு சீனா இந்தச் சட்டத்தை செயல் படுத்த இருப்பதாக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின் றனர்.

இந்தச் சட்டம் குறித்து ஹாங்காங் நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கவிருப்பதாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் கூறியதையடுத்து ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாகச் செய்தி வெளி வந்துள்ளது.

சட்டத்தைத் தள்ளுபடி செய்தோ தாமதப்படுத்தவோ கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு மாறாக தலைவர் கேரி லாம் கூறியதை அடுத்து புதிய பேரணி உருவாக இருக்கிறது.

சர்ச்சைக்குரிய இந்தச் சட்டம் தேவை என்று கேரி லாம் கூறி வருகிறார். மனித உரிமை பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சுமார் ஒரு மில்லியன் பேர் நேற்று முந்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதிகபட்சமாக 240,000 பேர் கலந்துகொண்டதாகப் போலிசார் தெரிவித்துள்ளனர். ஏற்பாட்டாளர்களின் எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்டால், பிரிட்டிஷ் அரசு 1997ஆம் ஆண்டு சீனா விடம் ஹாங்காங்கை ஒப்படைத்த பிறகு அங்கு நடந்த ஆகப் பெரிய ஆர்ப்பாட்டமாக அது வரலாற்றில் இடம்பெறும்.