பெய்ஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் அமைந்துள்ள நிலச்சரி சுரங்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3 என்ற கணக்கில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து இடிபாடுகளில் சிக்கி அங்கிருந்த ஒன்பது பேர் மாண்டனர்.
இதில் கிட்டத்தட்ட 10 பேர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தைத் தொடர்ந்து சுரங்கப் பணிகள் காலவரம்பின்றி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சீனாவில் ஒருமாதகால இடைவெளியில் ஏற்படும் மூன்றாவது சுரங்க விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

