உக்ரேன்: மனநல மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி

கியூவ்: உக்ரேனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் மாண்டனர். நேற்று முன்தினம் மாலையில் நடந்த இந்தத் தீச் சம்பவத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நான்கு பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் 9 பேர் எவ்விதக் காயமுமின்றி மீட்கப்பட்டதாக அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.