மலேசிய அமைச்சருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட ஆடவர்

மலேசியா: மலேசியாவின் சமூக ஊடகங்களில் அதிக பிரபலமாகப் பரவிய ஓரினச் சேர்க்கை காணொளியில் மலேசிய அமைச்சர் ஒருவருடன் இருந்தது தாம்தான் என ஒரு திரு முகம்மது அப்துல் ஹஸிக் அஸிஸ் எனும் ஆடவர் ஒப்புக்கொண்டுள்ளார். 

மேலும் தம்முடன் இருந்த அமைச்சரின் பெயரைக் குறிப்பிட்டதுடன் அந்த அமைச்சர் தலைவராக இருக்க அவருக்குத் தகுதி இல்லை என்றும் அப்துல் ஹஸிக் கூறியுள்ளார்.

"நான், ஹஸிக் அஸிஸ், நேற்று 'வைரலாக' பரவிய காணொளியில், அமைச்சருடன் இருந்த நபர் என்று உறுதியுடன் ஒப்புக்கொள்கிறேன்,”
“என் அனுமதி இல்லாமல், மே மாதம் 11ஆம் தேதி சன்டாகான் இடைத்தேர்தலின்போது இந்த காணொளி ஹொடல் ஃபொர் லிஃப்ஸ்ல் எடுக்கப்பட்டது,” என்றார் அவர், 

மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் அந்த அமைச்சரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த குறிப்பிட்ட அமைச்சர் தலைவராவதற்கு தகுதியில்லாதவர் என்றும் இன்று காலை அவரது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதிவேற்றிய காணொளியில் வலியுறுத்தினார் திரு ஹஸிக்.  

அடிப்படைத் துறைகளுக்கும் வர்த்தகப் பொருள்களுக்கும் துணை அமைச்சரான டாடோ சரீ ‌‌‌ஷாம்சுல் இஸ்காந்தர் முகம்மது ஆகின்னுக்கு (Datuk Seri Shamsul Iskandar Mohd Akin), திரு ஹஸிக் மூத்த அந்தரங்கச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இணையத்தில் வைரலாக பரவும் இந்த ஆபாசக் காட்சிகளைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மலேசிய பிரதமர் மகாதீர் கூறியுள்ளதாக மலேசியாவின் 'த ஸ்டார்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே திரு ஹலிக் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பார் என்று தங்களால் நம்பமுடியவில்லை என அவரது நண்பர்கள் த ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர். பல்கலைக் கழகத்தில் சட்டத்துறையில் படிக்கும்போது அவர் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும் அவர்கள் கூறினர்.