மலேசிய அமைச்சர்: அது நானில்லை

மலேசிய அரசியல் களத்தைப் பரபரப்பாக்கியிருக்கும் ஓரின பாலியல் உறவு தொடர்பான காணொளியில் இருப்பது தாம் அல்ல என்று கூறிய மலேசியா வின் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி, “என்னுடைய நற்பெயர், பண்பு நலன்களுக்கு அவப்பெயர் விளைவித்து எனது அரசியல் வாழ்வைப் பாழாக்கும் நோக்கு டன் செய்யப்படும் இழிவான செயல்,” என்று நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

“இந்த கீழ்த்தரமான ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை யற்றவை,” என்றார் அவர்.

“இந்த அருவருப்புக்குரிய குற்றச்சாட்டுகளை என்மீது சுமத்திய நபர் மீதும் மற்ற நெறியற்றவர்கள் மீதும் எனது வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள்,” என்றும் திரு அஸ்மின் அலி, 54, குறிப்பிட்டார்.

தாமும் மலேசிய அமைச்சர் ஒருவரும் ஓரின பாலியல் உறவில் ஈடுபட்டிருப்பதைப் போன்ற காணொளியின் தொடர்பில் தமது ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பதாக மலேசிய அரசாங்க அதிகாரி ஒருவர் நேற்று தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

திரு அஸ்மின் ஒரு தலைவராக இருப்பதற்குத் தகுதியற்றவர் என்று குறிப்பிட்ட முஹம்மது ஹஸிக், 27, அமைச்சர் மீது ஊழல் தொடர்பான விசாரணையை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் மேற்கொள்ள வேண் டும் என அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். அந்தக் காணொளி யில் திரு அஸ்மினின் வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றம் செய்ததாகக் குறிப்பிடும் சில தகவல்களும் இருந்தன.

திரு ஹஸிக் தற்போது தொழில் துறைகள், வர்த்தகப் பொருட்கள் துறையின் துணை அமைச்சர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அக்கினின் முதன்மை தனிச் செயலாளராக இருக்கிறார்.

ஓரின பாலியல் உறவு தொடர்பான காணொளி தனது அனுமதியின்றி கடந்த மாதம் 11ஆம் தேதி சண்டாகான் இடைத்தேர்தலின் போது ஃபோர் பாயின்ட்ஸ் ஹோட்டலில் உள்ள ஓர் அறையில் எடுக்கப்பட்டதாகவும் திரு ஹஸிக் தமது ஒப்புதல் வாக்குமூலக் காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.

இரு ஆடவர் ஹோட்டல் அறை யில் பாலியல் உறவு கொள்வதைக் காட்டும் காணொளி பத்திரிகை யாளர்களுக்கு அடையாளம் தெரி யாத நபர்களிடமிருந்து வாட்ஸ்ஆப் மூலம் நேற்று முன்தினம் அனுப்பப் பட்டது. அது இணையத்தில் வைரலானது. நேற்று மாலை அதே போன்ற இன்னொரு காணொளி வெளியானது.

அம்னோ பேராளர் மன்றத்தின் உறுப்பினரான லோக்மான் நூர் அடான் நேற்று முன்தினம் இதன் தொடர்பில் போலிசில் புகார் செய்தார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலிஸ் உயரதிகாரி மஸ்லான் மன்சூர் கூறினார்.

திரு அன்வார் இப்ராஹிமின் பிகேஆர் கட்சியின் இளையர் பிரிவு உறுப்பினராக இருக்கிறார் திரு ஹஸிக். அந்தக் கட்சியின் துணைத் தலைவர் திரு அஸ்மின் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

“தலைவர்களின் நற்பெயர், பண்புநலன்கள் ஆகியவற்றை இழிவுபடுத்தி அவர்களின் அரசி யல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இத்தகைய காணொளி களின் நோக்கம்,” என்று திரு அன்வார் இப்ராகிமின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா இந்த விவகாரத் தின் தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காணொளி விவகாரம் தொடர்பாக தாம் திரு அஸ்மின் அலியுடன் நீண்ட நேரம் பேசியதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள் ளார். “சாக்கடை அரசியலைத் தவிர்த்து நாட்டின் முன்னேற்றத் தில் மக்கள் கவனம் செலுத்த,” அவர் மக்களிடம் கோரினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!