‘ஜி20’: தீர்வு ஏற்படும் சாத்தியம் குறைவு

வா‌ஷிங்டன்: ‘ஜி20’ மாநாட்டை யொட்டி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியே இருவரும் சந்தித் தாலும் இரு நாடுளுக்கு இடையே உள்ள வர்த்தகப் பூசலுக்குத் தீர்வு ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவு என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 28, 29 தேதிகளில் ஜப்பானின் ஒசகா நகரில் ‘ஜி20’ உச்சநிலை கூட்டம் நடைபெறு கிறது. அப்போது அதிபர் ஸியைச் சந்திக்க விரும்புவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் சீனாவி லிருந்து அமெரிக்காவுக்கு இறக்கு மதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் வரி விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப் படலாம்.

ஆனால் இரு தலைவர்களின் சந்திப்பு பற்றி இரு தரப்பிலும் இதுவரை உறுதிப்படுத்தப்பட வில்லை. இரு நாடுகளுக்கு இடை யிலான வர்த்தகப்போரால் உல களாவிய சந்தைகளிலிருந்து டிரில் லியன் கணக்கான டாலர் காணாமல்போய்விட்டது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தையிலாவது நல்ல பலன் ஏற்படும் என்று உலக முதலீட்டாளர்கள் ஆவலுடன் காத் திருக்கின்றனர்.

கடந்த மே மாதத்திலிருந்து வர்த்தகப் பூசலைத் தவிர்க்கும் பேச்சுவார்த்தையில் இரு நாட்டின் பேராளர்களும் ஈடுபட்டு வந்த னர்.

ஆரம்பத்தில் நல்ல முன்னேற்றம் தென்பட்டாலும் இரு நாடுகளும் தங்களுடைய நிலையிலிருந்து விட்டுக்கொடுக்காததால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந் தது.

மே 10ஆம் தேதியிலிருந்து இரு நாடுகளும் பேச்சு நடத்த வில்லை.

இதற்கிடையே டிரம்ப்-ஸி உத்தேச சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

“ஜப்பானில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் எதுவும் கூற முடியாது,” என்று வெள்ளை மாளிகை பாதுகாப்பு மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!