ஏவுகணை: சவூதி விமான நிலையத்தில் 26 பேர் காயம்

ஏவுகணை: சவூதி விமான நிலையத்தில் 26 பேர் காயம்

1 mins read
Google News Preferred Icon

ரியாத்: ஏமனின் ஹுதி பிரிவினைவாதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் அண்டை நாடான சவூதி அரேபியாவின் தென்மேற்கு விமான நிலையத்தில் இருந்த பொதுமக்களில் 26 பேர் காயம் அடைந்தனர்.

மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் காயம் அடைந்தவர் களில் அடங்குவர்.

புதன்கிழமை விடியற்காலையில் அபா விமான நிலையத்தை ஏவுகணை தாக்கியது என்று சவூதி ராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்தத் தாக்குதல் துல்லியமாக நடத்தப் பட்டுள்ளது என்று பிரிவினை வாதிகள் கொக்கரித்துள்ளனர்.

ஏமன் அரசாங்க படைகளுக்கும் ஹுதி பிரிவினைவாதிகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டு களாக போர் நடைபெற்று வரு கிறது. இதில் சவூதி தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணிப்படை ஏமன் அரசாங் கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

ஏமனில் மேற்குப் பகுதி முழுவதையும் பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் நிலைமை மோசமானது.

இந்த நெருக்கடியில் அதிபர் அப்டிராபு மன்சூர் ஹாடி நாட்டை விட்டு வெளியேறினார்.