'கிம்மிடமிருந்து அழகிய கடிதம் வந்துள்ளது'

'கிம்மிடமிருந்து அழகிய கடிதம் வந்துள்ளது'

1 mins read

வா‌ஷிங்டன்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னிடமிருந்து தமக்கு அழகிய கடிதம் வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், அந்தக் கடிதத்தைக் காட்டத் தயார், ஆனால் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட கடிதம் அது என்றார்.

டிரம்ப் இப்படி பேசி யிருப்பது மற்றொரு முறை கிம்மை அவர் சந்திக்க விரும்புவதைக் காட்டுகிறது.

இதனால் வடகொரிய -அமெரிக்க 3வது உச்சநிலை சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியாவின் அணுவாயுதக் களைவில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் கிம் மீது டிரம்ப் இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளார்.

ஆனால் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளை ஓரளவாவது விலக்க வேண்டும் என்று வடகொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கிம் எழுதிய கடிதத்தில் என்ன இருக்கிறது என்பதை திரு டிரம்ப் வெளிப்படுத்தவில்லை. ஆனால் வடகொரியா வாய்ப்புகள் நிறைந்த நாடு என்று திரு டிரம்ப் சொன்னார்.