வாரம் ஐந்து கிராம் பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் நுழைகின்றன

வாரம் ஐந்து கிராம் பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் நுழைகின்றன

1 mins read

சிங்கப்பூர்: ஒவ்வொரு வாரமும் மக்கள் வாரம் ஐந்து கிராம் அளவுக்கு பிளாஸ் டிக் துகள்களை உட்கொள்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப் பட்டுள்ளது.

ஐந்து கிராம் பிளாஸ்டிக் துகள்கள் என்பது ஒரு கடன் அட்டைக் குச் சமமானது. சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் நீர் என பல்வேறு வழிகளில் பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்கின்றன. உலக முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஐம்பதுக் கும் மேற்பட்ட ஆய்வு முடிவு களை ஆராய்ந்ததில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.

ஐந்து கிராம் கணக்குப்படி பார்த்தால் ஒரு வருடத் திற்கு 250 கிராம் பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்கின்றன என்று ஆய்வு நடத்திய வேர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சுர்(WWF), நியூ கேசல் பல்கலைக்கழகம் ஆகியவை தெரிவித்துள்ளன. நமது உடலுக்குள் பிளாஸ்டிக் துகள்கள் நுழைவதைத் தவிர்க்க வேண்டுமானால் ஆண்டுக்கு மில்லி யன் டன் கணக்கான பிளாஸ்டிக் தயாரிப்புகளை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.