மலேசிய அரசியல் களத்தில் நிலவி வரும் பதற்றம், குழப்பம்

மலேசிய அரசியல் களத்தில் நிலவி வரும் பதற்றம், குழப்பம்

2 mins read
f1f5db6f-6223-4063-86d4-20917580d048
அரசாங்க அதிகாரி முஹம்மது ஹஸிக் அப்துல் அஸிஸ். படம்: ஹஸிக் ஃபேஸ்புக் -
Google News Preferred Icon

ஓரின பாலியல் உறவு தொடர்பான ஆபாச காணொளியில் தம்முடன் மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி இருப்பதாகக் கூறியுள்ள அரசாங்க அதிகாரி முஹம்மது ஹஸிக் அப்துல் அஸிஸ் அமைச்சர் மீது மேலும் சாடியுள்ளார்.

அமைச்சரின் அரசியல் செயலாளர் ஹில்மான் இத்ஹாம் தம்மை சந்தித்து மூன்று ஆண்டுகளாக அமைச்சருடன் இருந்துவரும் தொடர்பு குறித்து பொய் சொல்லுமாறு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தொழில் துறைகள், வர்த்தகப் பொருட்கள் துறையின் துணை அமைச்சர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அக்கினின் மூத்த தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்த ஹஸிக் பணியிலிருந்து இடைக்காலத்திற்கு நீக்கப்பட்டுள்ளார்.

அதனுடன், நேற்று சமூக ஊடகங்களில் காணொளியோடு சேர்ந்து பரவிவந்த அமைச்சர் அஸ்மினின் வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்ட நிதி பரிவர்த்தனை சீட்டு போலியானது என்று மலேசியாவின் ஆகப் பெரிய வங்கியான 'மேபேங்க்' வங்கி தெரிவித்துள்ளது.

காணொளியில் இருப்பது தானல்ல என்று அமைச்சர் அஸ்மின் நேற்று கூறினார்.

தமது நற்பெயருக்கும் பண்புநலன்களுக்கும் அவப்பெயர் விளைவித்து தமது அரசியல் வாழ்வைப் பாழாக்கும் நோக்கிலான இழிவான செயல் இது என்று அவர் வர்ணித்துள்ளார்.

இந்தக் காணொளி விவகாரம் தொடர்பாக தாம் திரு அஸ்மின் அலியுடன் நீண்ட நேரம் பேசியதாகக் கூறிய பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், "சாக்கடை அரசியலைத் தவிர்த்து நாட்டின் முன்னேற்றத்தில் மக்கள் கவனம் செலுத்துக," என கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் அஸ்மின் பிகேஆர் கட்சியின் துணைத் தலைவராவார். அக்கட்சியின் இளையர் பிரிவின் உறுப்பினராக ஹஸிக் உள்ளார்.