ஓரினச்சேர்க்கை பட விவகாரம்: மீண்டும் மறுப்பு,போலிசில் புகார்

அரசாங்க அதிகாரி ஒருவருடன் தாம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுவதை மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி மீண்டும் மறுத்துள் ளார். தம்மைத் தொடர்புபடுத்தி புகார் கூறி வரும் ஹஸிக் அஸிஸ் பற்றி தமக்கு ஓரளவுதான் தெரியும் என்றும் அவர் நேற்று கூறினார்.

"கட்சியின் உறுப்பினரான அவர் பற்றி எனக்கு ரொம்ப நாட்களுக்கு முன் தெரியும்," என்று சிலாங்கூர் பொருளியல் வளர்ச்சிக் கழகம் நடத்திய நோன்புப் பெருநாள் நிகழ்ச்சியின்போது திரு அஸ்மின் செய்தியாளர்களிடம் கூறினார்.

"முதலில் அவர் எங்கள் (பிகேஆர்) கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் எதிர்த்தரப்பில் (தேசிய முன்னணி) இணைந்தார். தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றதும் மீண்டும் அவர் எங்கள் கட்சிக்குத் திரும்பி வந்தார். இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்தான் இப்போது அவதூறு கூறிவருகிறார்," என்றார் அவர்.

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரான திரு அஸ்மின் இவ்

விவகாரம் தொடர்பில் முதன்முதலாக நேற்றுதான் நேரடியாகக் கருத்து தெரிவித்தார்.

தொழில்துறை துணை அமைச்சரின் முதன்மை அந்தரங்கச் செயலாளரான ஹஸிக் நேற்று முன்தினம் காலையில் ஃபேஸ்புக் வாயிலாக அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இரு ஆடவர்கள் ஓரின உறவு கொள்ளும் காணொளியில் இருப்பது தாமும் அமைச்சர் அஸ்மின் அலியும்தான் என்று அந்த ஃபேஸ்புக் பதிவில் அவர் கூறியிருந்தார். அதனை அன்று மாலையே அறிக்கை வாயிலாக திரு அஸ்மின் மறுத்திருந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் அந்த காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

இந்நிலையில், அமைச்சர் அஸ்மின் தம்முடன் வைத்திருக்கும் மூன்றாண்டு உறவை மறைக்க முயல்வதாக நேற்றுக் காலை ஹஸிக் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் பெரிதாகி வரும் நிலையில் முதன்மை அந்தரங்கச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹஸிக் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுபோன்ற இழிவான அரசியல் விமர்சனங்களை ஒதுக்கி வைக்குமாறு பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கும் ஆலோசனையைப் பின்பற்றுமாறு தமது கட்சித் தலைமையையும் கட்சியின் சக தலைவர்களையும் திரு அஸ்மின் நேற்றைய பேட்டியின்போது கேட்டுக்கொண்டார்.

பரவி வரும் காணொளி பொய்யானது என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் அது பரப்பப்பட்டு வருவதாகவும் பிரதமர் மகாதீர் நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், அஸ்மினின் அரசியல் செயலாளர் ஹில்மான் இதாம், புத்ரா ஜெயாவில் தம்மைச் சந்தித்ததாகவும் அமைச்சர் தொடர்

பாகக் கூறியதை மறுத்து அறிக்கை வெளியிடுமாறு அவர் தம்மைக் கேட்டுக்கொண்டதாகவும் ஹஸிக் தெரிவித்துள்ளார்.

"மேலும், காணொளியில் நான் குறிப்பிட்டடிருந்ததை மறுத்து பொய்யுரைக்குமாறு அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் அறையில் நடந்ததையெல்லாம் அஸ்மின்தான் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் தங்களுக்குள் ஓரினச் சேர்க்கை நடந்தது இது முதல்முறை அல்ல என்றும் ஹஸிக் கூறினார்.

இதற்கிடையே, அஸ்மினின் அரசியல் செயலாளர் ஹில்மான் இதாம் ஓரினப் புணர்ச்சி காணொளி தொடர்பாக போலிசில் புகார் அளித்துள்ளார். இவ்விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்துமாறு சமயத் தலைவர்களையும் அவர் கேட்டுக்கொண்டார். தாமும் போலிசில் புகார் அளித்திருப்பதாக ஹஸிக் நேற்று பிற்பகல் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!