சுடச் சுடச் செய்திகள்

‘சீன விவகாரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை’

ஹாங்காங்: ஹாங்காங்கில் நிலவும் வன்முறை தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அரசு அலுவலகங் கள் மூடப்பட்டன.

குற்றச்செயல்களில் சந்தேகத் துக்குரியவர்களை  சீனாவிடம் ஒப்படைக்கும் நாடு கடத்தும் சட்டத்தை எதிர்த்துக் கடந்த சில நாட்களாகவே ஹாங்காங்கில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்பட இருந்த நிலையில், வன்முறை காரணமாக அது தள்ளி வைக்கப் பட்டது. 

இந்தப் போராட்டம் வன்முறை யான நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த போராட்டக்காரர் களுக்கு எதிராக ஹாங்காங் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.

இந்த வன்முறையில் இதுவரை 66 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. போலிஸ்காரர்கள் 21 பேரும் காயமடைந்தனர்.

10 ஆண்டுகளில் இல்லாத தொடர் வன்முறை காரணமாக ஹாங்காங்கில் முக்கியமான அரசு அலுவலகங்கள் நேற்று மூடப்பட் டன.

இதற்கிடையே, இந்தக் கலவரம் குறித்து பொறுப்பற்ற அறிக்கையை  வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றி யத்தை சீனா சாடியுள்ளது.

“ஹாங்காங் விவகாரங்கள் முற்றிலும் சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதை நான் பல முறை கூறியுள்ளேன்.

“அதில் தலையிட எந்தவொரு நாட்டிற்கோ, அமைப்புக்கோ, தனி நபருக்கோ உரிமையில்லை,” என்று பெய்ஜிங்கில் நடந்த செய்தி யாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜெங் சுவாங் சொன்னார்.

“அட்மிரால்டி பகுதியில் நடந் தது அமைதியான பேரணி அல்ல. மாறாக ஒருங்கிணைக் கப்பட்ட கலவரம்.

“நிலைமையைக் கையாள சட்டத்திற்குட்பட்டு ஹாங்காங் அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் துணை நிற்போம்,” என்றும் அவர் கூறினார்.

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon