‘அமெரிக்கா- ரஷ்யா உறவு மோசமாகிறது’

மாஸ்கோ: ரஷ்யா மீது அமெரிக்கா பல பொருளா தாரத் தடைகளை விதித்து வரும் நிலையில், அமெரிக்கா வுடனான உறவு மிகவும் மோசமடைந்து கொண்டே செல்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் ரஷ்யா மீது

பல்வேறு பொருளியல் தடை களை விதித்துள்ளது.

ரஷ்யாவுடன் நட்புறவு பாராட்டும் நாடுகள் மீதும் பொருளியல் தடை விதிக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கிறது. சிரியா, உக்ரேன் விவகாரம், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு உள் ளிட்ட விவகாரங்கள் முக்கிய பிரச்சினைகளாகவும் இருந்து வருகின்றன. இந்நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துப் பேசியுள்ள விளாடிமிர் புட்டின், “இருதரப்பு உறவு கீழ்நோக்கிச் செல்கிறது, நாளுக்கு நாள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.

ஜப்பானில் இம்மாத இறுதியில் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

இதில் டோனல்ட் டிரம்ப், விளாடிமிர் புட்டின் இடையிலான சந்திப்பு நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில் புட்டின் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!