விமான நிலையத் தாக்குதலுக்கு சவூதி அரேபியா பதிலடி

விமான நிலையத் தாக்குதலுக்கு சவூதி அரேபியா பதிலடி

1 mins read

ரியாத்: விமான நிலையத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஏமனில் சவூதி அரேபியா இரண்டு வான்வெளித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் விமான நிலையத்தைத் தாக்கியதில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த மோதல் வலுத்து வருகிறது.