விசாரணைக்கு ஒத்துழைக்காத அம்னோ உச்ச மன்ற உறுப்பினர், மலேசிய இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர் கைது

விசாரணைக்கு ஒத்துழைக்காத அம்னோ உச்ச மன்ற உறுப்பினர், மலேசிய இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர் கைது

1 mins read
5c7d73d8-3f07-42cb-962b-24e9f82ed036
அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினர் லொக்மான் நூர் ஆடம். -

ஓரினச் சேர்க்கை காணொளி சர்ச்சையைத் தொடர்ந்து மலேசிய போலிசார் தீவிர விசாரணை வேட்டையில் இறங்கியுள்ளதையடுத்து அவர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த இரு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஜாங் ஹில்பார்க்கில் உள்ள அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினரான லொக்மான் நூர் ஆடமின் வீட்டில் நடத்திய சோதனையின்போது அவர் தமது கைத்தொலைபேசியை போலிசிடம் ஒப்படைக்க மறுத்தார்.

மேலும் போலிசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை. பணிகள் மேற்கொண்டிருந்த போலிஸ் அதிகாரியிடம் குரலை உயர்த்திப் பேசியுள்ளார்.

விசாரணைக்கு ஒத்துழைப்பளிக்காத அவரை கைது செய்ததாக சிலாங்கூர் போலிஸ் படையின் மூத்த உதவி ஆளுநர் ஃபட்பைல் அஹ்மத் கூறியுள்ளார்.

லொக்மானுடன் இருந்த மலேசிய இந்தியர் காங்கிரஸ் உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நாகப்பனையும் போலிசார் கைது செய்துள்ளனர்.

தகாத சொற்களைப் பயன்படுத்தி அரசாங்க ஊழியரை பணிகள் மேற்கொள்ள தடையாக இருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரும் விசாரணைக்காக காஜாங் போலிஸ் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.