காணொளியில் இருப்பது என் மகன் அல்ல: ஹஸிக்கின் தந்தை

காணொளியில் இருப்பது என் மகன் அல்ல: ஹஸிக்கின் தந்தை

1 mins read
420cee7b-15ba-4ac0-be0f-0b0b8ccfa702
முஹம்மது ஹஸிக் அப்துல் அஸிஸ் -

மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது தன் மகன் அல்ல என்று கூறி, சர்ச்சையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஹஸிக்கின் தனதை 53 வயது அப்துல் அஸிஸ் இப்ராகிம்.

தன் மகன் தான் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக வெளியாக்கிய காணொளியைக் கண்டு தாம் திடுக்கிட்டதாகக் கூறினார் அவர்.

"சர்ச்சைக்குரிய காணொளியைக் கண்டேன். ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டது என் மகன் அல்ல என்று நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

பலமுறை காணொளியைக் கண்டு ஆராய்ந்தும் தன் மகனாக அது இருக்க முடியாது என்று உறுதியுடன் கூறியுள்ளார் தந்தை.

தன் மகன் ஆபாசமாக நடந்துகொள்ளும் வகையில் இருக்க வாய்ப்பில்லை என்றும் காணொளி வெளிவந்ததற்கு முதல்நாள் கூட அவருடன் பேசியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நேற்று ஹஸிக்கின் வீட்டை ஐவர் கும்பல் சூரையாடியுள்ளதாக போலிஸிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹஸிக் கூறியுள்ளார்.

புக்கிட் அமானைச் சேர்ந்த போலிஸ்காரர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திகொண்ட ஐவர் சரவாக் மாநிலத்தின் கூச்சிங்கில் உள்ள வீட்டிற்குள் நுழைந்ததாக ஹஸிக் கூறியுள்ளார்.

"எனது குடும்பத்தை விட்டுவிடுங்கள். உண்மையை எதிர்கொள்ளுங்கள்," என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.