மலேசிய அரசியல் களத்தைத் திக்குமுக்காட வைத்துள்ள ஓரின சேர்க்கை காணொளி விவகாரம் தொடர்பில் முகம்மது ஹஸிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஹஸிக் நேற்று மாலை கைது செய்யப்பட்ட தாக மலேசிய போலிஸ் தெரி வித்தது. எனினும், அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
தொழில்துறை துணை அமைச் சரின் முதன்மை அந்தரங்கச் செய லாளராக இருந்த ஹஸிக், இரு ஆடவர்கள் ஓரின உறவுகொள் ளும் காணொளியில் இருப்பது தாமும் அமைச்சர் அஸ்மின் அலியும்தான் என்று கூறினார்.
மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி இதனைக் கடுமையாக மறுத்து வருகிறார்.
ஹஸிக் அரசாங்கப் பொறுப்பில் இருந்து நேற்று முன்தினம் இடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், திரு அஸ்மினுடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது தன் மகன் அல்ல என்று முகம்மது ஹஸிக்கின் தந்தையான அப்துல் அஸிஸ் இப்ராகிம் கூறி உள்ளார்.
பலமுறை காணொளியைக் கண்டு ஆராய்ந்தும் தன் மகனாக அது இருக்க முடியாது என்று உறுதியுடன் கூறியுள்ளார் அவர்.
தன் மகன் ஆபாசமாக நடந்து கொள்ளும் வகையில் இருக்க வாய்ப்பில்லை என்றும் காணொளி வெளிவந்ததற்கு முதல்நாள்கூட அவருடன் பேசியிருந்ததாக திரு அப்துல் அஸிஸ் கூறினார்.
இதற்கிடையே, 'ஒட்டாய் ரிஃபார்மசி' எனும் மக்கள் உரிமை கூட்டணியின் தலைவர் இட்ரிஸ் அகமது இந்த விவகாரம் குறித்த விசாரணை முடியும்வரை அமைச்சர் அஸ்மின் 'ஓய்வெடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

