சீனாவில் வரலாறு காணாத வெள்ளம்; 61 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் தெற்கு, மத்தியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரண மாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அறிக்கை வெளி யிட்டுள்ள அந்த நாட்டுப் பேரிடர் மீட்புப் படையினர், “சுமார் 9,300 வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்துவிட்டது. 3.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“சுமார் 3.71 மில்லியன் ஹெக் டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து விட்டது. சுமார் 4,300 பேர் வெள்ளத்தில் இருந்து மீட் கப்பட்டுப் பாதுகாப்பான இடங்க ளில் தங்கவைக்கப்பட்டனர்,” என்று தெரிவித்துள்ளனர்.

அருகிலுள்ள குவாங்டாங் மாகாணத்திலும் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.