ஆப்கானில் ஐஎஸ் தாக்குதல்: 11 பேர் பலி

ஆப்கானில் ஐஎஸ் தாக்குதல்: 11 பேர் பலி

1 mins read
Google News Preferred Icon

ஜலாலாபாத்: ஆப்கானிஸ் தானில் தற்கொலைப் படையி னர் நடத்திய தாக்குதலில் நேற்று 11 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் நேற்றுத் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஜலாலாபாத் நகரில் உள்ள காவல்துறை சோதனைச்சாவடியில் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டுகள் நிரப்பப்

பட்ட காரில் வந்த தற்கொலைப் படையினர் காவல்துறை சோதனைச்சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் 6 பேர் காவல்துறையினர் என்றும் ஒரு குழந்தை உட்பட 5 பொதுமக்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.