பெரு எல்லைக்கு விரைந்து செல்லும் வெனிசுவேலா மக்கள் 

வெனிசுவேலாவில் கடுமையான குடிநுழைவு சட்டம் நேற்று நடப்புக்கு வரவிருந்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் பெரு நாட்டில் தஞ்சம் புகுவதற்காக எல்லைப் பகுதிக்கு விரைந்து சென்றனர். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஆட்சியின் கீழ் அந்நாட்டின் பொருளியல் என்றும் இல்லாத அளவுக்கு சரிந்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்.

ஏராளமானோர் பெருவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர். பெரு நாட்டின் எல்லையில் உள்ள நகரை சென்றடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவர். படம்: ராய்ட்டர்ஸ்