எண்ணெய்க் கப்பல்களை தாக்கியது ஈரானே

வா‌ஷிங்டன்: ஓமான் வளைகுடா பகுதியில் இரு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானே காரணம் என்று அமெரிக்கா மீண்டும் கூறியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப் பட்டதில் ஈரானுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ஈரான் கூறியுள்ள நிலையில் ஈரான் கூறுவதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிராகரித்துள் ளார். அவ்விரு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரானிய புரட்சிப் படையினரே காரணம் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும் அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை வெளியிட்ட வீடியோவில் இந்த உண்மை தெரியவந்திருப்பதாக வும் திரு டிரம்ப் குறிப்பிட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட இரு கப்பல்களில் ஒன்றிலிருந்து வெடிக்காத கண்ணி வெடி ஒன்றை ஒரு சிறிய படகில் இருந்த ஈரானியப் படையினர் அகற்றுவதை வீடியோ படங்கள் காட்டுவதாகவும் திரு டிரம்ப் கூறினார்.

இந்நிலையில் ரஷ்யா, இரு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப் பட்டதில் அவசரமான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.

ஐக்கிய அரபு சிற்றரசு கடல் பகுதியில் கடந்த மாதம் நான்கு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப் பட்டதற்கும் ஈரானே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அமெரிக்கா வெளியிடவில்லை.

அமெரிக்காவின் அந்தக் குற்றச்சாட்டையும் ஈரான் மறுத் துள்ளது. அமெரிக்க அதிபராக திரு டிரம்ப் 2016ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் அமெரிக்கா வுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் நிலவுகிறது.

ஈரானுடன் அனைத்துலக நாடுகள் 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக திரு டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விரு நாடு களுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

திரு டிரம்ப் அவரது இந்த முடிவை மாற்றிக்கொள்ளாத வரை அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் தயாராக இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் கூறி யுள்ளனர். திரு டிரம்ப் அண்மையில் ஈரானுக்கு எதிராக பல தடைகளை விதித்ததால் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நார்வே நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் ஒன்றும் ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் ஒன்றும் ஓமான் வளைகுடா பகுதியில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் மிரட்டல் குறித்து அனைத்துலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது.

மத்திய கிழக்குப் பகுதிக்கு கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் பேட்ரிக் ஷனஹான் கூறியுள்ளார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!