ஈராக் மக்களை வாட்டும் சுட்டெரிக்கும் வெய்யிலும் அனல் காற்றும்

ஈராக் மக்களை வாட்டும் சுட்டெரிக்கும் வெய்யிலும் அனல் காற்றும்

1 mins read
467bb5b9-751d-41ce-8170-752782a1706a
பாக்தாத் தெருவில் ஒரு வியாபாரி வெய்யில் தாங்க முடியாமல் அட்டைப்பெட்டியின் ஒரு பகுதியை மடித்து தொப்பியாகப் பயன்படுத்துகிறார். படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

பாக்தாத்: உலகில் ஆக வெப்பமான நாடுகளில் ஒன்று ஈராக். அதிலும் இந்த ஜூன் மாதம் கொளுத்தும் வெயிலும் வீசும் அனல் காற்றும் ஈராக்கிய மக்களை பெரும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளன. மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்த போதிலும் கோடை வெப்பத்தை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அன்றாட வெப்ப அளவு 48 டிகிரி சென்டிகிரேட் என்றால் வெயிலின் தாக்கத்தை எப்படி தவிர்க்க முடியும். வெய்யில் எப்போது தணியும்? மழை எப்போது பெய்யும்? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள். பெரும்பாலான அலுவல கங்களில் வேலை நேரம் மாறியுள்ளது.

அரசாங்க பொது மருத்துவ மனைகளில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வரத் தயங்குவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.