ஹாங்காங்: ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் ஒரு கட்டடத்தின் உச்சியில் அறிவிப்புக் கொடியை தொங்கவிடச் சென்றவர் சாரக்கட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலிசார் கூறினர்.
சுமார் 35 வயதான லியுங் என்ற புனை பெயரில் அழைக்கப்பட்ட அந்த ஆர்ப்பாட்டக்காரர் பசிபிக் பிளேஸ் பேரங்காடி கட்டடத்தில் ஏறியபோதே போலிசாரும் தீயணைப்புப் படையினரும் அவரை கீழே இறங்கச் சொன்னதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் போலிஸ் படை பேச்சாளர் ஒருவர் கூறினார். ஹாங்காங்காங்கில் சென்ற வாரம் முதல் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

