ஜப்பானில் போலிசாரின் கைத்துப்பாக்கியை திருடியவன் மாயம்

ஜப்பானில் போலிசாரின் கைத்துப்பாக்கியை திருடியவன் மாயம்

1 mins read

தோக்கியோ: ஜப்பானின் சுய்டா நகரில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலிஸ் அதிகாரி அடையாளம் தெரியாத ஒருவனால் கத்தியால் தாக்கப்பட்டு நெஞ்சில் பலத்த காயம் அடைந்தார். அவர் வைத்திருந்த தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியையும் திருடிச்சென்ற அந்த நபரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அந்த நபரால் மக்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால் போலிசார் ஒலிபெருக்கி மூலம் ரயில் நிலையங்களில் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்து வருகின்றனர்.