குற்றத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேலிய பிரதமரின் மனைவி

குற்றத்தை ஒப்புக்கொண்ட இஸ்ரேலிய பிரதமரின் மனைவி

1 mins read

ஜெருசலம்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் மனைவி சாரா நெட்டன்யாகு, அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டார்.

பிரதமர் அலுவலகத்தில் சமையற்காரர் கிடைக்கவில்லை என்று பொய் சொல்லி வெளி யிலிருந்து உணவு கொண்டுவர அரசாங்கப் பணம் 99,300 டாலரை செலவு செய்ததாக சாரா நெட்டன்யாகு மீது குற்றம் சாட்டப்பட்டது. ஏமாற்று மற்றும் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு கள் அவர் மீது சுமத்தப்பட்டன.

இந்த வழக்கிற்கும் திருமதி சாரா நெட்டன்யாகுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவரது வழக்கறிஞர் கூறியுள் ளார். இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவை பதவி விலகச் செய்வதற்கான முயற்சி இது என்றும் அவர் சொன்னார்.

திருமதி நெட்டன்யாகு அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்களுடன் உடன்பாடு செய்துகொண்டார். அந்த உடன்பாட்டின் கீழ் திருமதி நெட்டன்யாகு 12,490 டாலரை அரசாங்கத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். அத்துடன் அபராதமாக 2,777 டாலர் செலுத்த வேண்டும்.

அந்த உடன்பாடு காண்பதற்கு அரசாங்க வழக்கறிஞர்கள் தரப்பு முக்கிய சலுகைகளை வழங்க வேண்டியிருந்ததாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் எர்ஸ் பாடன் கூறினார். வெளியில் உணவுக்கு ஆர்டர் கொடுத்தது எதுவும் திருமதி நெட்டன்யாகுவுக்கு தெரியாது என்று சென்ற ஆண்டு அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.