பிகேஆர் தலைவர்களின் தொலைபேசி எண்கள் கசிந்தது குறித்து அஸ்மின்

பிகேஆர் தலைவர்களின் தொலைபேசி எண்கள் கசிந்தது குறித்து அஸ்மின்

1 mins read

கோலாலம்பூர்: பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியை களங்கப்படுத்தும் ஆபாச காணொளி அக்கட்சித் தலைவர்கள் பலருக்கு 'வாட்ஸ்அப்' மூலம் அனுப்பப்பட்டு வரும் வேளையில் கட்சித் தலைவர்களின் தொலைபேசி எண்கள் கசிந்ததற்கு யார் காரணம் என்பதை பிகேஆர் கண்டுபிடிக்க வேண்டும் என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.

'வாட்ஸ்அப் மூலம்' அந்த செய்தியை பரப்பிய குழுவில் செய்தியாளர்களும் பிகேஆர் உறுப்பினர்களும் இருப்பதாகவும் அஸ்மின் அலி கூறினார். இத்தகைய பொய் செய்திக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பதை பிகேஆர் தலைவர் கண்டுபிடிக்க வேண்டும் என்று அஸ்மின் அலி கேட்டுக்கொண்டார்.