அன்வார்: ஆபாச காணொளி விவகாரத்தில் எனக்கோ, ஆதரவாளர்களுக்கோ சம்பந்தம் இல்லை

அன்வார்: ஆபாச காணொளி விவகாரத்தில் எனக்கோ, ஆதரவாளர்களுக்கோ சம்பந்தம் இல்லை

1 mins read
6241cefe-4954-4726-b831-8ac1de511961
கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், சமூக ஊடகங்களில் வலம்வரும் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியைக் களங்கப் படுத்தும் ஆபாச காணொளி விவகாரத்தில் தமக்கும் தமது ஆதரவாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். எல்லாரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதைச் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார் அவர். "நாங்கள் அதைச் செய்ய எந்தக் காரணமுமில்லை. நாங்கள் ஒரே கட்சியை, பக்கத்தான் ஹரப்பானைச் சேர்ந்தவர்கள்", என்று அன்வார் சனிக்கிழமை இரவு அவரது போர்ட் டிக்சன் தொகுதியில் நோன்புப் பெருநாள் இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமக்கும் அஸ்மினுக்கும் இடையில் பதவிப் போராட்டம் நடப்பதாகக் கூறப்படுவதையும் அன்வார் மறுத்தார். எல்லாத் தரப்பினரும் தன்னை ஆதரிப்பதாகவும் அவர் கூறினார். ஆபாச காணொளி மீதான புலன் விசாரணை முடியும்வரை அஸ்மின் விடுப்பில் செல்ல வேண்டும் என்று கூறப் படுவதையும் அன்வார் ஏற்கவில்லை.