ஹாங்காங் போராட்டம்: தலைமை நிர்வாகி பதவி விலக வலுக்கும் கோரிக்கை

ஹாங்காங்கில் வரலாறு காணாத அளவில் நேற்று முன்தினம் முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டு சர்ச்சைக் குரிய மசோதாவை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் தலைமை நிர்வாகி கேரி லாம் பதவி விலகக் கோரியும் முழக்கமிட்டு வருகின் றனர். நேற்று முன்தினம் நடந்த எதிர்ப்புப் பேரணிக்குப் பின்னரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் இருந்து வெளியேறவில்லை.

நேற்றும் நீடித்த பேரணியால் அரசாங்க அலுவலகங்கள் நேற்று மூடப்பட்டதாக தகவல்கள் தெரி விக்கின்றன.

காவல்துறையினரின் கட்டளை யையும் மீறி மத்திய பகுதியான அட்மிரல்டியில் இரவு முழுவதும் வீதிகளிலேயே பல ஆர்ப்பாட்டக் காரர்கள் இருந்து வருகின்றனர்.

இதனால் அட்மிரல்டி பகுதியில் சாலை மறியல்களால் கிட்டத்தட்ட 70 பேருந்து சேவைத் தடங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 10 பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்ட துடன் மற்ற பேருந்துச் சேவைகள் பாதை மாற்றிவிடப்பட்டன.

இரு வாரயிறுதிகளிலும் மில்லி யன் கணக்கானோர் வீதிகளில் போராட்டம் நடத்தியதையடுத்து ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் நேற்று முன்தினம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற பேரணியில் மட்டும் இரண்டு மில்லியன் பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை 340,000ஆக இருந்தது என்று காவல்துறையினர் கூறினர்.

இதுவரை பொதுமக்கள் நடத் திய ஆர்ப்பாட்டத்தால் மசோதா ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேரணிகள் வலுவிழந்து போனால் அரசாங்கம் மீண்டும் மசோதாவைத் தாக்கல் செய்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில், சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்ட ஆர்வல ரான ஜோ‌ஷுவா வோங், 22, நேற்று ஆர்பாட்டக்காரர்களிடம் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹாங்காங்கின் தலைவராக நீடிக்க திருமதி லாம் தகுதியற்றவர் என்று சொன்னார்.

“மசோதாவை ஒத்திவைத்து மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இதனை முற்றிலுமாக ரத்து செய்ய கேரி லாம் முன்வர வேண்டும். தற்போதைய நிலை மைக்குப் பொறுப்போற்றுக் கொண்டு கேரி லாம் பதவியில் இருந்து விலக வேண்டும்,” என்று திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் களிடம் அவர் கூறினார்.

ஹாங்காங்கில் ஜனநாயகத்தை ஆதரித்து 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்களுள் ஒரு வராக திரு வோங் திகழ்ந்தார். அந்தப் போராட்டங்களின் காரண மாக ஹாங்காங்கில் 79 நாட்க ளுக்கு முக்கிய சாலைகள் மூடப் பட்டன.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற் காக ஐந்து வாரச் சிறைத் தண்ட னையை நிறைவேற்றிய பின்னர் அவர் நேற்று விடுதலை செய்யப் பட்டார். தண்டனைக் காலம் அவருக்கு மூன்று மாதங்களில் இருந்து ஐந்து வாரங்களாகக் குறைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!