அமெரிக்காவிற்கும் ஈரானிற்கும் இடையில் தொடரும் பதற்றநிலை காரணமாக, மத்திய கிழக்கு வட்டாரத்திற்கு மேலும் 1,000 ராணுவ வீரர்களை அனுப்பவிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
"மத்திய கிழக்கில் ஆகாயம், கடல், நிலம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களால் மேலும் சுமார் 1,000 படைவீரர்களை அங்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டுள்ளேன்," என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் இடைக்காலத் தற்காப்புச் செயலாளர் பேட்ரிக் ஷனகான்.
மேல் விவரங்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பழி சுமத்தியுள்ளது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.

