அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் கள்ளக் குடியேறிகளை அடுத்த வாரம் முதல் அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றத் தொடங்குவார்கள் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்தத் தகவலில், "எவ்வளவு வேகமாக உள்ளே வந்தனரோ அவ்வளவு சீக்கிரமாக அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடிநுழைவு சுங்கத்துறை அமைப்பு மில்லியன் கணக்கானோரை வெளியேற்றும் முயற்சியில் இறங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலும் மெக்சிகோ, மத்திய அமெரிக்க பகுதிகளிலிருந்து வந்துள்ள சுமார் 12 மில்லியன் கள்ளக் குடியேறிகள் அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக வசித்து வருகின்றனர்.
இந்தத் தகவல் பற்றி வெளியிட்ட பதிவில், டிரம்ப், அவர்களை "வேற்றுலக உயிரிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.