கிரைஸ்ட்சர்ச் நகரிலுள்ள பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் நேரலை காணொளியை இணையத்தில் பகிர்ந்துகொண்டதாக ஒப்புக்கொண்ட நியூசிலாந்து ஆடவருக்குச் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) 21 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நாசிசத்தை ஆதரிக்கும் படங்களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனத்தை நடத்தும் பிலிப் ஆர்ப்ஸ், கண்டிக்கத்தக்க காணொளியைப் பகிர்ந்துகொண்ட இரு குற்றச்சாட்டுகளை ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார்.
பள்ளிவாசல் தாக்குதல் நடந்த மறுநாள், அந்தக் காணொளியில் "கொல்லப்பட்டோர் எண்ணிக்கையை" சேர்க்கும் வகையில் திருத்தியமைக்க அனுப்பியதாகவும், திருத்தியமைக்காத காணொளியை 30 பேருக்கு அனுப்பியதாகவும் 44 வயது ஆர்ப்ஸ் ஒப்புக்கொண்டார்.
முஸ்லிம் சமூகத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை ஆர்ப்ஸ் பெருமைப்படுத்த விரும்பினதாகவும், சிறைத்தண்டனை அல்லாது வேறெந்த தண்டனையும் பொருத்தமாக இருக்காது என்றும் நீதிபதி ஓ'டிரிஸ்கால் கூறினார்.

