சீனாவின் தென்மேற்கு மாநிலமான சீசுவானில் நேற்று இரவு நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கங்களால் 12 பேர் உயிரிழந்ததாகவும் 134 பேர் காயமுற்றதாகவும் சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வழக்கமாக அதிக நிலநடுக்கம் ஏற்படும் சீன மாநிலமான சீசுவானில் 30 நிமிட இடைவெளியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர் பலரை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.
நிலநடுக்கத்தால் அருகில் உள்ள செங்டு, சோங்சிங் பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் 5.9 என்றும் அடுத்தது 5.2 என்றும் பதிவாகி இருந்தது.
300க்கும் மேற்பட்ட தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

