வெல்லிங்டன்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள பள்ளிவாசல்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய காணொளியை இணையத்தில் பகிர்ந்துகொண்ட நியூசிலாந்து ஆடவருக்கு நேற்று 21 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
பள்ளிவாசல் தாக்குதல் பற்றிய காணொளியை பிலிப் ஆர்ப்ஸ் சுமார் 30 பேருக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. நாசிசத்தை ஆதரிக்கும் படங் களைப் பயன்படுத்தும் ஒரு நிறுவனத்தை நடத்தும் பிலிப் ஆர்ப்ஸ், கண்டிக்கத்தக்க காணொளியைப் பகிர்ந்துகொண்ட தான இரு குற்றச்சாட்டுகளை ஏப்ரல் மாதம் ஒப்புக்கொண்டார்.
பள்ளிவாசல் தாக்குதல் நடந்த மறுநாள், அந்தக் காணொளியில் "கொல்லப்பட்டோர் எண்ணிக்கை யை" சேர்க்கும் வகையில் திருத்தியமைக்குமாறு நண்பர் ஒருவரை பிலிப் ஆர்ப்ஸ் கேட்டுக்கொண்டதாகவும் திருத்தி அமைக்காத காணொ ளியை 30 பேருக்கு அவர் அனுப்பியதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. 44 வயதான ஆர்ப்ஸ் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்.
கிஐறஸ்ட்சர்ச் நகரில் தாக்குதல் நடந்த சில நாட்களில் அதுபற்றிய காணொளியை பலருக்கு அனுப் பியது கொடூரமானது என்று நீதிபதி ஓ'டிரிஸ்கோல் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் ஒரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய நிலையத்தில் ஒரு துப்பாக்கிக் -காரன் நடத்திய தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயம் அடைந்தனர்.

