ஐநா: ரோஹிங்யா பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை

ஐநா: ரோஹிங்யா பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை

1 mins read

நியூயார்க்: மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் சம் பந்தப்பட்ட விவகாரத்தை சரி யாகக் கையாளவில்லை என்பதை ஐநா ஒப்புக்கொண்டுள்ளது. ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை யில் இந்த விவரம் கூறப் பட்டுள்ளது. மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டு மூண்ட கலவரத்தைத் தொடர்ந்து ரோஹிங்யா மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் ஒடுக்குமுறையைக் கையாண்டது.

இதனால் அங்கிருந்து தப்பியோடிய 740,000 ரோஹிங்ய மக்கள் பங்ளாதே‌ஷில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். ரோஹிங்யா விவகாரத்தை ஐநா சரியாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவும் வேளையில் ஐநா முதல் முறையாக அக்குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளது.