மேலும் இரண்டு ஆபாச காணொளிகள் வெளியீடு

மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப் பட்டதாகக் கூறப்படும் ஓரினப் புணர்ச்சி தொடர்பான மேலும் இரண்டு காணொளிகள் வெளி யாகியுள்ளன.

மலேசிய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் ஓரி னப் புணர்ச்சி காணொளிகளின் தொடர்ச்சியாக ‘அஸ்மின் லவ் ஹஸிக் 3/4’ என்று தலைப்பிடப்பட்ட 46 வினாடி நீள காணொளி யூடியூப்பில் நேற்று வெளியானது.

அவற்றில் ஒரு காணொளியில் காட்சிகள் ஏதுமில்லை. இரு ஆடவர்களின் பேச்சு மட்டுமே பதிவாகியுள்ளது. அதில் அவர்கள் கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சந்திப்ப தற்கு உடன்படுகின்றனர்.

கடந்த வாரம் வெளியான காணொளியில் உள்ளவர்களே இதில் பேசுவதாக அந்தக் காணொ ளியைப் பதிவுசெய்தவர் கூறியுள் ளார். ரஹிம் ஜஃபார் என்ற பெயரில் இதனைப் பதிவேற்றி இருக்கும் யூடியூப் பயனாளர், இந்த உரையாடல் கோலாம்பூரில் உள்ள கிராண்ட் ஹயட் ஹோட்ட லில் இவ்வாண்டு மார்ச் மாதம் பதிவானது எனக் கூறியுள்ளார்.

‘வாட்சப்’பில் பகிரப்பட்ட மற் றொரு காணொளியில் இரு ஆட வர்களின் கால்கள் மட்டுமே தெரி கின்றன. அவர்களுடைய முகத் தைக் காணமுடியவில்லை.

இதற்கிடையே, மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் வளரும் நட்சத் திரமான திரு அஸ்மினைப் பிடிக் காத அவரது கட்சியைச் சேர்ந்த வர்களில் சிலரே ஓரினப் புணர்ச்சி ஆபாசக் காணொளிகளை வெளி யிட்டதாக தகவல்கள் வலம் வருகின்றன.

“என்னுடைய முன்னேற்றத் தைத் தடுக்கும் நோக்கில் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலர் இந்தக் காணொளியை வெளியிட்டதாக நம்புகிறேன்,” என்று திரு அஸ்மின் கூறியதாக தி ஸ்டார் இணையத் தளம் குறிப்பிட்டது.

ஆபாசக் காணொளி தொடர் பில் நேற்று முன்தினம் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார் திரு அஸ்மின்.

இந்த விவகாரம் குறித்து விசா ரிக்க அமைக்கப்பட்ட பணிக்குழு 21 பேரிடம் வாக்குமூலம் சேகரித் துள்ளது. காணொளியில் இருப் பது திரு அஸ்மினா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில் அந்தக் காணொளியில் மின் னிலக்க முறையில் மாற்றம் எது வும் செய்யப்படவில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். திரு அஸ்மினின் அலுவலர் அந்தக் காணொளி போலியானது என்று தொடர்ந்து கூறிவருகிறார்.

அமைச்சருக்கு அவப்பெயரை விளைவித்த ஆபாசக் காணொ ளியை ஆராய தொழில்நுட்ப உதவியைத் தங்களிடம் அதி காரிகள் கோரியிருப்பதாக மலே சியாவின் இணையப்பாதுகாப்பு அமைப்பு (சிஎஸ்எம்) கூறியுள்ளது.

இந்நிலையில், திரு அஸ் மினுக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பின் அவர் பதவி விலக வேண்டும் என பிகேஆர் கட்சியின் தலைவராக இருக்கும் திரு அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடார் நேற்று கூறியதாக மலேசியாக்கினி செய்தி இணையத்தளம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!