புளோரிடா பேரணியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் டிரம்ப்

புளோரிடா பேரணியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார் டிரம்ப்

1 mins read
5ca09002-d26b-44da-9a40-e94d65c6067c
2020ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரசாரத்தைச் நேற்று இரவு அதிகாரபூர்வமாகத் தொடங்கினார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டு தேர்தலுக்கான பிரசாரத்தைச் நேற்று இரவு அதிகாரபூர்வமாகத் தொடங்கினார். புளோரிடாவின் அம்வே சென்டரில் பெருங்கூட்டத்தின் முன்னிலையில் அதிபர் டிரம்ப் பேசினார்.

பெரிய தொலைக்காட்சி திரைகள், உணவு வண்டிகள், கஸ்லர்ஸ் எனும் வாத்தியக் குழு என பெரும் கொண்டாட்ட நிகழ்வாகப் பேரணி நடந்தேறியது.

மேலும் நான்கு ஆண்டுகள் பதவியில் நீடித்திருக்க அதிபர் டிரம்ப் தொடங்கியிருக்கும் முயற்சி, சிரமமான 18 மாதகாலத்தின் ஆரம்பம் என கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

அதிபர் டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை 50 விழுக்காடு அங்கீகாரத்தைப் பெற்றதே இல்லை. அதோடு, பல்வேறு வாக்காளர் கருத்துக்கணிப்புகளிலும் ஜனநாயகக் கட்சியினரைவிட அவர் பின்தங்கியே இருக்கிறார்.