உலகின் ஆக லட்சியவாதப் பருவநிலைத் திட்டங்களில் ஒன்றை நியூயார்க் அங்கீகரிக்கவுள்ளது

உலகின் ஆக லட்சியவாதப் பருவநிலைத் திட்டங்களில் ஒன்றை நியூயார்க் அங்கீகரிக்கவுள்ளது

1 mins read
4738a8e0-075c-404b-afcf-8fe7077d0c48
இந்த இலக்குகளை நியூயார்க் அடைந்தால், உலகின் சூடேற்றத்தைக் குறைக்கும் இலக்கு நிறைவேற்றப்படும். படம்: ஏஎஃப்பி -

சுற்றுப்புறத்திற்குத் தீங்கிழைக்கும் வாயுக்களின் வெளியாக்கத்தை 2050ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட முற்றாகத் தடுத்திடும் பருவநிலைத் திட்டத்தை நிறைவேற்ற நியூயார்க் சட்டமன்றத்தினர் இணங்கியுள்ளனர்.

பெட்ரோலை அதிகளவு பயன்படுத்தும் கார்களும் எண்ணெய் பயன்படுத்தும் வெப்பச்சாதனங்களும் இல்லாத எதிர்காலத்தை இத்திட்டம் பரிந்துரைக்கிறது.

அதோடு, நியூயார்க் மாநிலத்தின் மின்சாரம் அனைத்துமே கரிமம் இல்லாத மூலங்களிலிருந்து உருவாக்கப்படவிருக்கிறது.

ஆளுநர் ஆன்ட்ரூ குவோமோவும் சட்டமன்றத் தலைவர்களும் இவ்வாரம் அடைந்த இணக்கத்தின்கீழ், உலகத்தைச் சூடேற்றும் மாசுப்பொருட்களை 1990ஆம் ஆண்டின் அளவைவிட 2050ஆம் ஆண்டுக்குள் 85 விழுக்காடு குறைக்கப்படவேண்டும்.

காற்றுமண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றும் நடவடிக்கைகளின்மூலம் மீதி 15 விழுக்காடு ஈடுசெய்யப்படவேண்டும் என பருவநிலை தலைமைத்துவ, சமூகப் பாதுகாப்புச் சட்டம் வரையறுக்கிறது.

இந்த இலக்குகளை நியூயார்க் அடைந்தால், உலகின் சூடேற்றத்தைக் குறைக்கும் இலக்கு நிறைவேற்றப்படும்.