ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

1 mins read
db8da7ae-b6c1-4a7a-8b53-faa0acce2336
அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சநிலை மாநாட்டையொட்டி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ள டிரம்ப், நீண்ட காலப் பதற்றநிலைக்குப் பின்னர் மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது என்றார்.

உலகப் பொருளியலை மோசமாகப் பாதித்துள்ள வர்த்தகப் போரில் அமெரிக்காவும் சீனாவும் ஈடுபட்டு வந்துள்ளன.

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் பதற்றநிலையைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற மாதம் இரு வல்லரசுகளுக்கிடையே விரிவான வர்த்தக உடன்பாட்டை அடையும் முயற்சி தோல்வியடைந்தது.