கியூவ்: மலேசியாவின் எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தை விசாரித்துவரும் விசாரணையாளர்கள், சம்பவத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களின் பெயர்களை முதல் முறையாக வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து தலைமையிலான விசாரணைக் குழு, விபத்து குறித்து விசாரணை நடத்தி வரு கிறது. ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலா லம்பூரை நோக்கிப் பறந்த எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஆதரவு பிரிவினை வாதிகள் ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட ஏவுகணைகளைக் கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக் கலாம் என்று விசாரணை அதி காரிகள் நம்புகின்றனர்.

