வர்த்தகப் போர்: அமெரிக்கா-சீனா பேராளர்கள் மீண்டும் பேச்சு

வர்த்தகப் போர்: அமெரிக்கா-சீனா பேராளர்கள் மீண்டும் பேச்சு

1 mins read

வா‌ஷிங்டன்: அடுத்த வாரம் ஜப்பானில் 'ஜி20' உச்சநிலை மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி அமெரிக்காவும் சீனாவும் மீண்டும் வர்த்தகப் பேச்சை தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசியதாகவும் தாங்கள் இருவரும் நேரடியாக சந்திப்பதற்கு முன்பு இரு நாட்டின் குழுக்களும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் என்றும் டுவிட்டர் பதிவில் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

கடந்த மே மாதம் சீனப் பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா அதிகரித்ததால் ஒரு மாத காலமாக நடைபெற்ற இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பாதியில் நின்றது. இதற்கிடையே அடுத்த வாரம் ஒசாகாவில் நடைபெறும் உச்ச மாநாட்டின்போது அதிபர் டிரம்ப்பைச் சந்திக்க சீன அதிபர் ஸி ஜின்பிங் தயாராக இருப்பதாக சீனாவின் அதிகாரபூர்வ ஊடகமான ஸின்ஹுவா தெரிவித்தது.