"நான் அவன் இல்லை": சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

"நான் அவன் இல்லை": சர்ச்சை காணொளி குறித்து இளம் அரசியல்வாதி

1 mins read
d35ed9ec-0efc-4521-a229-1391691e9334
திரு அன்வார் இப்ராஹிம்மின் அரசியல் செயலாளர் திரு ஃபர்ஹஷ் முபாரக், படம்: த ஸ்டார். -

மலேசியப் பொருளியல் விவகார அமைச்சர் முகமது அஸ்மின் அலி இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் காணொளியில் இருப்பது தான் இல்லை என்று பக்கத்தான் ராக்யாட் கட்சியைச் சேர்ந்த ஃபர்ஹஷ் முபாரக் தெரிவித்தார். கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளராகப் பணியாற்றும் அவர், திரு அஸ்மின் மீதான கவனத்தைத் திசைத் திருப்புவதற்காகச் சிலர் தனக்கு எதிராகப் புரளிகளைப் பரப்புவதாகக் குறை கூறினார்.

திரு அன்வாரின் வீட்டில் நிகழ்ந்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் தான் இல்லை என்று சிலர் பொய்யுரைத்ததன் அடிப்படையில் 'ஆர்பிகே' என்ற வலைப்பதிவாளர் கதை கட்டியதாகத் திரு ஃபர்ஹஷ் 'த ஸ்டார்' பத்திகையிடம் கூறினார்.

"என்னைப் பொறுத்தவரையில் 'ஆர்பிகே' புதினம் எழுதுவதில் கைத்தேர்ந்தவர். நான் எதுவும் கூற மறுத்ததால் ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதுபடுத்தியுள்ளன. இது மிகவும் அபத்தமானது. இப்போது என்னைப் பேட்டி எடுக்கக் கேட்டு அனைவரும் வருகின்றனர்," என்று அவர் சொன்னார்.

இந்தச் சர்ச்சைக்குத் திரு அன்வாரின் தரப்பு காரணம், பிரதமர் மகாதீர் முகம்மது தரப்பு காரணம் போன்ற கிசுகிசுக்கள் முக்கியமல்ல என்று கூறிய திரு ஃபர்ஹஷ், போலிஸ் விசாரணை முடியும்வரை காத்திருப்பதே நல்லது என்றார்.