ஐந்தாண்டுகளில் காணாத உயர்வை எட்டிய தங்க விலை

ஐந்தாண்டுகளில் காணாத உயர்வை எட்டிய தங்க விலை

1 mins read
Google News Preferred Icon

தங்க விலை கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 1.8 விழுக்காடு அதிகரித்தது.

அமெரிக்க மத்திய வங்கி இனி வரும் காலங்களில் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான முடிவுகளை எடுத்துள்ளதே தங்கத்தின் விலை உயர்வுக்கான காரணம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சிங்கப்பூரில் நேற்று இரவு நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை $58ஆக பதிவானது.

அனைத்துலகச் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் தங்கத்தின் விலை ஒரு அவுன்சுக்கு 1,379 அமெரிக்க டாலராக அதிகரித்தது. கடைசியாக 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தங்கத்தின் விலை இந்த நிலையை எட்டியிருந்தது.

விழாக்காலத்தில் தங்க நகை வாங்க நகைக் கடைகளுக்குப் படை எடுக்கும் வாடிக்கையாளர் களில் சிலர், விலை இறங்கும் வரை காத்திருக்கப் போவதாகக் கூறுகின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கியின் இந்த அறிவிப்பின் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பும் சற்று குறைந்துள்ளது.