'தவறு செய்துவிட்டது ஈரான்'

'தவறு செய்துவிட்டது ஈரான்'

1 mins read
efee484b-7b53-44a4-bfb5-e58db0efa5fc
-

அமெரிக்காவின் ஆளில்லா வானூர்தியை ஈரான் தவறுதலாகச் சுட்டிருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். திரு டிரம்ப் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பாததை அவரது கருத்துகள் காட்டியபோதும், "இதனை அமெரிக்கா சகித்துக்கொள்ளாது" என்று திரு டிரம்ப் வெள்ளை மாளிகையிலுள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"வானூர்திக்குள் யாரும் இல்லை. இருந்திருந்தால் நிலைமை முற்றிலும் மாறுபட்டிருக்கும், இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இது மிகப் பெரிய வித்தியாசமாக இருந்திருக்கும்," என்று திரு டிரம்ப் கூறினார்.

இது குறித்து வெள்ளை மாளிகையில் இன்று கலந்துரையாடல் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகைமைப் போக்கைக் காட்டும் தனது செயல்களால் ஈரான் கவலைக்குரிய சூழலை உருவாக்கியிருப்பதாக அமெரிக்காவின் நட்பு நாடான சவூதி அரேபியா கூறியது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மற்ற வளைகுடா நாடுகளுடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும் சவூதி அரேபியா கூறியது.