பிரிட்டன் சட்டத்தை மீறிவிட்டது

பிரிட்டன் சட்டத்தை மீறிவிட்டது

1 mins read

லண்டன்: சவூதி அரேபியாவுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதித்தன் மூலம் பிரிட்டிஷ் அரசு சட்டத்தை மீறியுள்ள தாக பிரிட்டிஷ் நீதிமன்றம் நேற்றுக்கூறியது. அந்த ஆயுதங்கள் ஏமனில் நடைபெற்ற சண்டையில் பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்று அது கூறியது. இந்தத் தீர்ப்பின்படி பிரிட்டன் உடனடியாக ஆயுத ஏற்றுமதியை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால், சவூதி அரேபியாவுக்கு அடுத்த ஆயுத ஏற்றுமதிக்கான உரிமம் தடுக்கப்படும்.