யூலின் பெருவிழாவில் உயிருடன் எரிக்கப்படும் நாய்கள்

யூலின் பெருவிழாவில் உயிருடன் எரிக்கப்படும் நாய்கள்

1 mins read
433d2b59-b81a-42b0-8106-6049bc635291
-

சீனாவிலுள்ள 'யூலின்' நாய் பெருவிழாவில் நூற்றுக்கணக்கான நாய்கள் எரிக்கப்படுவதை இணையத்தில் வலம்வரும் படங்களும் காணொளிகளும் காட்டுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் 15,000 நாய்கள் வரை சித்திரவதை செய்யப்படுகின்றன. அந்நாய்கள் கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்ட பின்னர் அவற்றின் மாமிசங்கள் விற்கப்படுகின்றன.

இந்நாய்கள் கலப்பைகளால் அடித்துக் கொல்லப்படுகின்றன அல்லது உயிருடன் எரிக்கப்படுகின்றன. இதனைக் கொண்டாட்டமாகக் கருதுகின்றனர் குவாங்சி மாநிலத்திலுள்ள யூலினிலுள்ள மக்கள்...

நாய் மாமிசம் உடலுக்கு ஆரோக்கியம் என்று அந்த மக்கள் நம்புகின்றனர். இதனைத் தடை செய்யக்கோரும் இணைய மனுக்கள் ஏராளமாக இருந்தபோதும் முன்னேற்றம் மெதுவாக இருப்பதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.