கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் கடந்த மார்ச் மாதம் ஒரு பயங்கரவாதி துப்பாக்கி யால் சுட்டதில் காயமடைந்த பலருக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு தேவைப் படுகிறது. ஆனால் பாதிக்கப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கிறைஸ்ட்சர்ச் நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிறைஸ்ட்சர்ச் பள்ளிவாசலில் துப்பாக்கிக்காரன் சுட்டதில் படுகாயம் அடைந்த அட்டகோகு என்ற நியூசிலாந்து நாட்டவருக்கு அவரின் தாயார் மற்றும் உறவினர் கவனிப்பு தேவைப்படுகிறது. ஆனால் நியூசிலாந்து குடிநுழைவுத் துறையினரின் அனுமதி கிடைக் காத காரணத்தால் துருக்கி யிலிருந்து தன் தாய் இங்கு வர முடியவில்லை என்று அட்டகோகு கூறியுள்ளார்.
மார்ச் மாதம் நடந்த அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டுப் பிரதமர் திருமதி ஜெசிண்டா அர்டென் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தாக்குதலில் பாதிக்கப் பட்டோருக்கு அரசாங்கம் பல வழிகளில் உதவ கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறினார். அவரது உரை பலராலும் பாராட்டப் பட்டது. நியூசிலாந்து தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 40 பேர் காயம் அடைந்தனர்,

