இந்தோனீசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ: 30 பேர் மரணம்

இந்தோனீசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ: 30 பேர் மரணம்

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று தீப்பெட்டி தொழிற்சாலையில் மூண்ட தீயில் சிறுவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த தொழிற்சாலையில் தீ மூண்டதற்கான காரணம் தெரியவில்லை என்றும் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் சுமத்ரா பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவர் ரியாடில் லுபிஸ் கூறினார். தீயில் உடல் கருகி இறந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர் என்று அவர் சொன்னார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லவிருந்த வேளையில் அந்த தொழிற்சாலையில் மிகப்பெரிய வெடிப்பு சத்தத்தைக் கேட்டதாக அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் கூறினார். பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றாத காரணத்தால் இந்தோனீசியாவில் இத்தகைய தொழிற்சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக அதிகாரிகள் கூறினர்.

2017ஆம் ஆண்டு ஜகார்த்தா அருகே உள்ள தொழிற்சாலையில் மூண்ட தீயில் 46 பேர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர்.