சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது பிலிப்பீன்ஸ்

சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது பிலிப்பீன்ஸ்

1 mins read

மணிலா: இம்மாதத் தொடக்கத்தில் தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த மீன்பிடிப் படகு சீனாவின் மீன்பிடிப் படகினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் குறித்து கூட்டாக விசாரணை மேற்கொள்ளலாம் என்று சீனா கூறிய யோசனையை ஏற்க பிலிப்பீன்ஸ் மறுத்துள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பில் சீனாவும் பிலிப்பீன்சும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டு விசாரணை தேவையில்லை என்றும் பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சர் டியோடோரோ டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அந்த சம்பவம் குறித்து கூட்டாக விசாரணை மேற்கொள்ளலாம் என்று முன்னதாக சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் லு காங் யோசனை கூறியிருந்தார். கடந்த ஜூன் 9ஆம் தேதி தென்சீனக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த மீன்பிடிப் படகை சீனப் படகு ஒன்று வேண்டுமென்றே மூழ்கடித்ததாக பிலிப்பீன்ஸ் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.