பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நேற்று தொடங்கிய 34வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ளும் ஆசியான் நாடுகளின் தலைவர் கள் வட்டார வர்த்தக உடன்பாடு காண்பதில் மிகவும் உறுதியாக இருப்பதாக பேங்காக் தகவல்கள் கூறின.
அமெரிக்காவுக்கும் சீனாவுக் கும் இடையில் வர்த்தகப் பூசல் நிலவும் வேளையில் ஆசியான் தலைவர்கள் வட்டார வர்த்தக உடன்பாடு காண்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இரண்டு நாள் ஆசியான் மாநாட்டில் முக்கியமாக வட்டார வர்த்தக உடன்பாடு தொடர்பில் ஆசியான் தலைவர்கள் பேச்சு நடத்த உள்ளனர்.
பத்து ஆசியான் நாடுகளுடன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் சேர்ந்து வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு காணும் என்று ஆசியான் தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரமும் பேங்காக் கூட்டத்தில் விவாதிக் கப்படவுள்ளது. ரோஹிங்யா மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ரோஹிங்யா விவகாரத்தை மியன்மார் அரசாங்கம் சரியாகக் கையாளவில்லை என்று அனைத்துலக சமூகம் குற்றம் சாட்டி வரும் வேளையில் பேங்காக்கில் ஆசியான் மாநாடு
நடைபெறுகிறது.

