ஹாங்காங்: பதற்றம் தணிந்து  துப்புரவுப் பணி தொடங்கியது

ஹாங்காங்: ஹாங்காங்கில் நீடித்த 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அங்கு பதற்றம் சற்று தணிந்துள்ளது.

வான் சாய் என்ற இடத்தில் போலிஸ் தலைமையகத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அதிகாலை அவ்விடத்தைவிட்டுச் சென்ற பின்னர் அந்த இடத்தில் அதிகாரிகள் துப்புரவுப் பணி களைத் தொடங்கினர்.

போலிஸ் தலைமையகத்தை சுற்றியுள்ள பகுதியில் நிரம்பி யிருந்த குப்பைகளையும் உலோக தடுப்புக் கம்பிகளையும் அகற்றும் பணியில் துப்புரவுப் பணியாளர் களும் போலிசாரும் ஈடுபட்டனர்.

போலிஸ் தலைமையகத்திற்கு வெளியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைத்த தடுப்புகள் லாரிகள் மூலம் அகற்றப்பட்டன. ஆர்ப் பாட்டக்காரர்கள் தூக்கிவீசிய குப்பைகளை ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போட்டு அவற்றை அப்புறுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சர்ச்சைக்குரிய மசோதாவை ரத்து செய்யக்கோரி போராட்டங் களில் ஈடுபட்டுவந்த ஆர்ப்பாட் டக்காரர்கள் வெள்ளிக்கிழமை போலிஸ் தலைமையகத்தை சுற்றி வளைத்து முற்றுகைப் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

அந்தப் போராட்டம் கிட்டத்தட்ட 16 மணி நேரம் நீடித்தது. போராட்டத்தின்போது சுமார் 100 போலிஸ் அதிகாரிகள் தலைமை யகத்தை விட்டு வெளியில் வரமுடியவில்லை. முற்றுகைப் போராட்டத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டதாகவும் போலிசாரின் அன்றாடப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தாகவும் போலிசார் கூறினர்.

மக்களுக்கு போலிசார் வழங்கக்கூடிய அவசர சேவை களும் தடைப்பட்டதாகவும் போலிசாருக்கு வந்த 60 அவசர அழைப்புகளை போலிசாரால் கவனிக்க முடியவில்லை என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

முற்றுகைப் போராட்டத்தின் போது 9 பெண் போலிஸ் அதிகாரிகள் மற்றும் நான்கு போலிஸ்காரர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் மறியல் போராட்டம் காரணமாக அவர் களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். போலிஸ் ஆணையாளர் ஸ்டீபன் லோவை சந்திக்க வேண்டும் என்று கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிசார் மீதும் தலைமையகக் கட்டடம் மீதும் முட்டைகளை வீசியதாகவும் கூறப்பட்டது. போலிசார் நேற்று அதிகாலை விடுத்த கடும் எச்சரிக்கை அறிவிப்புக்குப் பிறகு ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றதாக அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!